ஆகாயவழி அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!

வீதியில் காணப்படும் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் உயிரை பாதுகாப்பதற்காக விமான அம்பியூலன்ஸ் சேவை ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நவீன வசதிகளுடன் கூடிய 152 அம்பியூலன்ஸ் வண்டிகளை சேவையில் இணைக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதேவேளை நவீன வசதிகளுடன் கூடிய மேலும் 140 அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
Related posts:
யாழ் பல்கலை மோதல் விவகாரம்: 3 பேருக்கு ஒரு வருடத் தடை , நான்கு பேருக்கு 6 மாதங்கள் தடை!
மின் தடைப்பட்ட பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த திலீபன் எம். பி
தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆ...
|
|