ஆகஸ்ட் 7 இல் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவு செய்யப்பட வாய்ப்பு!

Sunday, June 28th, 2020

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்து தெரிவான மூவரின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காக முன்வைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டமும் அன்றைய தினமே இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் பெயர்களும், அங்கிருந்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுவதுடன், குறித்த அமைச்சின் ஊடாக மூன்று பேரில் இருந்து ஒருவரை, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்வார் எனவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: