ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!
Wednesday, July 21st, 2021சர்ச்சைக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் ஓகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எதிரவரும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒரு பட்டறை நடத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் நாட்டில் தவறான கருத்து நிலவுகிறது என்றும் அதை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்பதாக இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பு காரணமாக ஓகஸ்ட் மூன்றாம் வாரம்வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்த பிக்குகளுடனான ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி கொத்தலாவல பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் கீழ் வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|