ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வானது எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்நிலையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது..
இதற்கிடையில் ஜனாதிபதி நேற்று மேலும் பல வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது மற்றும் காமினி செனரத்தை பிரதமரின் செயலாளராக நியமிப்பது தொடர்பாக இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மேலும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் புதிய செயலாளர்களின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு இலட்சம் அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு!
இ.போ.ச. பேருந்துச் சாரதியைத் தாக்கினர் என - தனியார் பேருந்துச் சாரதி உட்பட மூன்று பேர் கைது !
படித்த மகளிர் திட்டக் காணிகளை மீண்டும் மக்களிடம் வழங்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட ...
|
|