ஆகஸ்ட்மாதம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் – மகிந்த தேசப்பிரிய!

பொதுத்தேர்தல் ஆகஸ்ட்மாதம் முடிவடைவதற்கு முன்னர் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட்மாதத்திற்குள் தேர்தலை நடத்தவேண்டும் அதன்பின்னர் தேர்தலை நடத்த முடியாது இதனை நாங்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசியம் என்றால் ஒன்பது வார காலத்தை குறைக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக ஜூலை அல்லது ஆகஸ்டில் தேர்தலை நடத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 8 முதல் 15 ம் திகதிக்குள் தேர்தல் இடம்பெறலாம் என வெளியான தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர்
எந்த திகதியில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு இன்னம் ஆராயவில்லை இந்த ஊகங்கள் சரியானவை என தெரிவிக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நா.பேரவை!
அரிசி களஞ்சியசாலைகளை பரிசோதனையிடும் நடவடிக்கை ஆரம்பம்!
இணைப்புக்களை துண்டிக் வேண்டாம் - தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு கோரிக்கை!
|
|