ஆகக்கூடிய சம்பளத் கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும் – கல்வி அமைச்சர்!

ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் தொழிற்துறையை தரம் உயர்த்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண நுண்கலை கேந்திரநிலையத்தில் கொழும்பு ஆனந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
புதிதாக 15ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், நீண்டகால வேலைத்திட்டமாக கல்வியல் கல்லூரிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
உலகில் உள்ள தொழிற்துறைகளில் உன்னதமான தொழிற்துறை ஆசிரியர் தொழிற்துறையாகும். இத்தொழிற்துறையில் உள்ளோருக்கே ஏனைய தொழிற்துறையிரை உருவாக்குவதற்கு உள்ள ஆற்றல் ,ஆசிரியர் தொழிற்துறைக்கு மட்டுமே உள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|