அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வங்கினார் ஜனாதிபதி!

Friday, December 15th, 2023

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து இதற்கு தேவையான ஒதுக்கீடுகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும பயனாளர்களில் 12 இலட்சம் பேர் வலுவூட்டல் வேலைத்திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: