அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் நிதி திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தகவல்!
Wednesday, September 20th, 2023அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு விபரங்கள், உறுதிசெய்யப்பட்ட ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 713 பயனாளிகளுக்குரிய, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டடார்.
குறித்த நிதியானது பயனாளிகளின் கணக்குகளில், வங்கியினால் வரவு வைக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 11 இலட்சத்து 62 ஆயிரத்து 245 அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜூலை மாதத்துக்குரிய கொடுப்பனவாக 7,278 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான பரிசீலனைகள் நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்குமான கொடுப்பனவு செலுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
20 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள், தற்போது கட்டம் கட்டமாக இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக கடந்த மாத இறுதியில் 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்களை சமர்ப்பித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு நலன்புரி சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|