அஸ்வெசும நலன்புரியில் முறைகெடு – மேன்முறையீட்டு செய்ய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் ஏற்பாடு!
Thursday, June 29th, 2023அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தினுடாக உதவி கொடுப்பனவில் விடுபட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீட்டு இணைய பதிவுகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் இரத்தினம் அமீன் ஏற்பாட்டு செய்தார்.
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தினுடாக உதவி கொடுப்பனவில் விடுபட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீட்டு இணைய பதிவுகள் கரைச்சி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவ்வாறான பதிவுகளை மேற்கொள்ள தினமும் அதிகமான மக்கள் வருகின்ற நிலை காணப்பட்டதுடன், பலர் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வருபதாகவும் வெளி வணிகநிலையங்களில் பணம் கொடுத்து மேன்முறையீடு செய்வதற்கான வசதிகள் இல்லையென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளருக்கு மக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக கரைச்சி பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்ட இணைப்பாளர்.
கரைச்சி பிரதேச செயலகத்தின் பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக இன்று முதல் அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தினுடாக உதவி கொடுப்பனவில் விடுபட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீட்டு இணைய பதிவுகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொண்டார்.
இதன் மூலம் நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தினுடாக உதவி கொடுப்பனவில் விடுபட்ட 150ற்கு அதிகமான பயனாளிகளுக்கான இணைய மூலமான பதிவுகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது
000
Related posts:
|
|