அஸ்வெசும திட்டத்தின் முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!.

Wednesday, August 16th, 2023

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று(16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக தற்போது அனைத்து சிக்கல்களும் நிவர்த்திக்கப்பட்டுள்ள 15 இலட்சம் குடும்பங்களுக்கான மாதாந்த தவணை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

தவணைக் கொடுப்பனவிற்கான நிதியை நிதி அமைச்சின் ஊடாக அரச வங்கிகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் அஸ்வெசும திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும தொடர்பில் 217,000 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் விசாரணைகளை 5 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனையடுத்து அஸ்வெசும தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 8 இலட்சம் மேன்முறையீடுகள் மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: