அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, October 30th, 2023

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் பொது மக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்காக 8.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அடுத்த நிதியாண்டில் 1.36 மில்லியன் பயனாளி குடும்பங்களுக்கு பணம் வரவு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்ச ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: