அஸ்வெசும உதவித் திட்டம் – நாடு முழுவதுமிருந்து 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகள் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, July 11th, 2023

அஸ்வெசும உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பாக மொத்தம் 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகளும் 17 ஆயிரத்து 500 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மைதிப்பாய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டவுடன் அஸ்வெசும உதவித் திட்டத்தின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: