அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு!

Monday, May 31st, 2021

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை முதல் செலுத்துகை நடைபெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழினுப்பக்குழு சமர்ப்பித்த கண்டறிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலக சுகாதார மையம், தமது கண்டறிதலில், ஆறு மாதங்களில் கூட அஸ்ட்ராசெனெகா இரண்டாவது அளவைப் பெற முடியும் என்று கூறியுள்ளது.

இந்தநிலையில் அதுவரை காலப்பகுதிக்கு அஸ்ட்ராசெனெகாவின் முதல் அளவு நோய் எதிர்ப்பு திறனைக்கொண்டிருப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆரம்பத்தில் 500,000 குப்பிகள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்தியாவில் இருந்து இலவசமாகப் பெற்றது, மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்ததமை குறிப்பிடத்தக்கது.

Related posts: