அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்துக்கு!
Tuesday, January 31st, 2023இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை, தடயவியல் கணக்காய்வுக்காக, கணக்காய்வாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான ஐவரடங்கிய குழுவின் அறிக்கை அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் அவருக்கு தடை விதிக்குமாறு, சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் கடந்த நவம்பர் 6 ஆம் திகதி தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|