அவுஸ்திரேலியா – இலங்கை கிரிக்கெட் தொடர் அனுமதிச்சீட்டு வருமானத்தை மக்களுக்காக செலவிட தீர்மானம்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இலங்கை – அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடரின் ஆரம்பம் தொடர்பாக கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் செயலாளர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு குறைவாக உள்ள வேளையில் அவுஸ்திரேலிய அணியின் இலங்கை விஜயம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலமானதாக அமையும்.
எனவே, இந்த போட்டிக்கான அனுமதிச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களுக்காக செலவிடும் நோக்கில் விளையாட்டுதுறை அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|