அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி தற்கொலை!

Tuesday, October 3rd, 2017

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.  மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். எனினும் அவரது நண்பர் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தார் என, அந்த தீவிலுள்ள மற்றுமொரு அகதி கூறியுள்ளார்.

மேலும், குறித்த வைத்தியசாலையில் போதுமான வைத்திய ஆதரவு கிடைக்காமையினால், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உறுதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை ...
மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு பயணம் திட்டமிடப்பட்ட செயல் - கபே அமைப்பு குற்றச்சாட்டு!
நாவாந்துறை பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர...