அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!

Wednesday, April 20th, 2016

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் , பெண் ஒருவர் மற்றும் குழந்தைகள் மூன்று பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ‘ரிஷ்னா துவ’ என்ற படகின் மூலம் நீர்க்கொழும்பில் இருந்து அவிஸ்திரேலியாவிற்கு பயணமாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: