அவுஸ்திரேலியாவிடமிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி இலங்கையை வந்தடைந்தது – பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை!

Thursday, September 22nd, 2022

அவுஸ்திரேலியாவினால் நன்கொடையா அளிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த அரிசி தொகை தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

600 மெட்ரிக் தொன் அரிசி இந்த நன்கொடையில் உள்ளடங்குகிறது. மேலும் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் என்பனவும் விரைவில் நாட்டிற்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்படவுள்ளது.

“அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பல தசாப்தகால நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பங்களிப்பு பாரிய நெருக்கடியின் போது எங்களின் நல்லெண்ணத்தின் விரிவாக்கமாகும்” என்று இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: