அவதூறுக் குற்றச்சாட்டு: சுப்பையா பொன்னையாவுக் எதிராக பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடு!

Monday, August 3rd, 2020

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சதா என்பவரால் வெளியிடப்பட்ட அவதூறு விளைவிக்கக் கூடியதான கருத்துக்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவர்களால் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை 29 ஆம் திகதியன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை குறித்த சதா என்ற நபர் மேற்கொண்டிருந்தார். இதன்போதே  வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மீது அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்தை தெரிவித்திருந்தார்.

அந்த முறைப்பாட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது –

சுப்பையா பொன்னையா என்றும் சதா என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் ஒருவர் தான் கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவராகதான்  இருந்ததாகவும் அக்காலப்பகுதியில் அவருக்கு கிடைக்கவேண்டிய கொடுப்பனவு பணங்களை சி. தவராசா ஆகிய நான் மோசடி செய்ததாகவும் அந்த மோசடி செய்த பணத்தை மீளப்பெறுவதற்காக குறித்த நபர் பொலிஸ்மா அதிபர் உட்பட பல உயர் தரப்பினரிடம் முறைப்பாடு செய்திருந்தபோதும் அம்முறைப்பாடுகள் எதுவும் விசாரிக்கப்படவில்லை எனவும் என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

இது தொடர்பாக குறித்த சதா என்ற நபரை அவரை விசாரித்து அவர் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அறியுமாறும் அவரது குற்றச்சாட்டில் உண்மைகள் ஏதும் இல்லை எனில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினராக தவராசா ஆகிய நான் ஆரம்பகாலத்திலிருந்து இருந்துவரும் நிலையில் அந்தநபரை யாரென்றும் எனக்கு தெரியாது. அவரது முகவரியும் எனக்கு தெரியாததால்  86, இராசாவின் தோட்டம் வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள யாழ் ஊடக அமையத்தினூடாக அவரது முகவரியை அறிந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: