அவதானமாக செயற்படுமாறு இலங்கையருக்கு எச்சரிக்கை!

Thursday, March 30th, 2017

ஈமெயில் மூலமாக கணனியின் நினைவக சேமிப்புகளை அழிக்கும் வைரஸ் ஒன்று குறித்து இலங்கை சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈமெயில் மூலமாக அனுப்பப்படும் குறித்த வைரஸ் ஆனது, அதனைத் தாங்கி வரும் ஈமெயிலைத் திறந்தவுடன் செயற்படத் தொடங்கி, கணனியில் இருக்கும் தகவல்களை முற்றாக அழித்து விடும் ஆற்றல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இலங்கையர்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இணையத்தள பாதுகாப்பு அமைப்பின் முக்கியஸ்தர் சந்திரகுப்த தேநுவர எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிமுக மற்றவர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான ஈமெயில் தகவல்களை புறக்கணிப்பது இவ்வாறான வைரஸ்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: