அவதானமாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் அறிவுறுத்தல்!

நாட்டின் பல பிரதேசங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளின் வானம் மேகங்களினால் மூடியுள்ளமையில், மழையுடனான காலநிலை ஒன்றை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
நாட்டின் பல பிரதேசங்களில், விசேடமாக கிழக்கு, ஊவா, வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் ஓரளவு கடுமையான (75 மீல்லி மீற்றர்) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ள அவதானமாக செயற்பாடுமாறு மக்களிடம் திணைக்களம் கேட்டுள்ளது.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியக ஆணையாளர் பதவிக்கு 95 பேர் விண்ணப்பிப்பு!
இலங்கையில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிறைச்சாலைகளில் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவது அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது – பாதுகா...
|
|