அவசியமற்ற வருகைகளைத் தவிருங்கள் – யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Saturday, March 27th, 2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசியமற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர், மருத்துவர் சி.யமுனானந்தா, பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

அதேநேரம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் வழமைபோல இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நேற்றிரவு இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளித்தபோது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: