அவசர சந்தர்ப்பங்களில் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல தாமதிக்க வேண்டாம் – சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் வலியுறுத்து!

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறுவர்களைக் கொண்டு செல்லுமாறு அந்த சங்கம் பெற்றோர்களிடம் கோரியுள்ளது.
மருந்து தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களை அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்ல பெற்றோர்கள் பின்வாங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், சிறந்த சத்தான உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும் என நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|