அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

Tuesday, July 23rd, 2019

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், மக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக அவசரகால சட்டத்தை நீடிப்பது உசிதமானதாகவுள்ளதென தாம் அபிப்பிராயப்படுவதால், இந்த நீடிப்பை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் தமக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, அவசரகால சட்ட நீடிப்பை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

இந்த கட்டளைச் சட்டத்தின் பாகம் 2இன் ஏற்பாடுகள், நாடு முழுவதும் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: