அவசர உதவிகளுடன் ‘சுகன்யா’ ‘சுற்லேஜ்’ கொழும்பு வருகை!
Saturday, May 21st, 2016இலங்கையில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. இந்தியாவின் நிவாரணப்பொருட்களுடன் கப்பல்கள் இரண்டும் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இலங்கையில் முப்படைகளும் அரசாங்கமும் நிவாரண உதவிகளை வழங்கிக்கொண்டுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் உதவியாக அமையுமென இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த 71 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிர்க்கதியாகியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றது. அதேபோல் இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் சர்வதேச நாடுகளும் முன்வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பலான “ஐ.என்.எஸ். சுகன்யா” மற்றும் “ஐ.என்.எஸ் சுற்லேஜ்” என்ற போர்க்கப்பல்கள் மூலமாக இந்தியாவின் அவசர உதவிப் பொருட்களுடன் வந்துள்ளன.
Related posts:
|
|