அவசரகாலச் சட்டம் காலாவதியானது ?

கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, ஜனாதிபதி மாதம் தோறும் நீடிப்புச் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் நாள் நீடிப்புச் செய்து வெளியிடப்பட்ட அவசரகாலச்சட்ட அரசிதழ் அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது.
அவசரகாலச்சட்டத்தை நீடிப்புச் செய்வது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதையும் ஜனாதிபதி இதுவரை வெளியிடவில்லை. இதனால் அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
போக்குவரத்து சேவைக் கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு!
வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து இதுவரை இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை - அமைச்சர் ட...
உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளது வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள...
|
|