அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் கிளிநெச்சி தலை நிமிர்ந்திருக்காது – கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, August 28th, 2018

அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கும் அவதூறுகளுக்கும் நாம் அடிபணிந்திருந்தால் யுத்தத்தில் சிதைந்துகிடந்த கிளிநொச்சி மாவட்டம் மீளெழுச்சிகண்டு அபிவிருத்தியில் நிமிர்ந்திருக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் தோழர் விந்தன் தெரிவித்தள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற கட்சியின் நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அரசியல் தீர்வு முயற்சி முதற்கொண்டு அபிவிருத்திப்பணிகள் வரையான அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்கென எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை வகுத்துச் சாதித்தக் காட்டியுள்ளார்.

கடந்தகாலங்களில் நாம் ஆற்றிய மக்கள் பணிகள் யாவும் எமக்குக்கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்தினைக் கொண்டு மட்டுமன்றி அரசுடனான நல்லிணக்க அணுகுமுறையினாலுமே சாதித்து காட்ட முடிந்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் நாம் அரசுடன் பேசியபொழுது அதற்கெதிராக அரசில் அழுத்தங்களும் அவதூறுகளும் எம்மீது  பொழியப்பட்டன. அன்று நாம் அழுத்தங்களுக்கும் அவதூறுகளுக்கும் அடிபணிந்திருந்தால் இன்று கிளிநொச்சி மாவட்டம் மீள் எழுச்சி கண்டிருக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: