அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் மீட்பு!
Wednesday, March 7th, 2018
சாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய மலசலகூடத்தினுள் இன்று புதன்கிழமை (07) காலை அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது..
கறுப்பு துணி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சிசு காணப்பட்டுள்ளது. சிசு இறந்து சுமார் 3தினங்களுக்கு மேலாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
சிசு ஆணா/ பெண்ணா என இனங்கான முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.
மலசலகூடத்திற்குள் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையிலேயே அதனை நகரசபை ஊழியர்கள் திறந்து பார்த்த போது இறந்த நிலையில் சிசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொதுசந்தை வளாகத்தினுள் புதிய மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டதில் இருந்து இந்த பழைய மலசலகூடம் பூவணையில் இல்லாமல் . பூட்டப்பட்ட (மலசலகூட வெளிக்கதவு)நிலையில் காணப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மலசலகூடத்திற்குள் சிசிவின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|