அழிவடைந்த சோள அறுவடையை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

Monday, February 18th, 2019

சேனாபடைப்புழுவினால் அழிவடைந்த சோள அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கு, கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கால்நடைகளுக்கு உணவாக வழங்கும் நோக்கில் இந்த சோளம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அடுத்த வாரமளவில் இதற்கான வி​லை நிர்ணயிக்கப்படும் எனவும்,  தமது திட்டம் குறித்து விவசாயத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், டொக்டர் நிஹால் வெதசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களிலும் படைப்புழுவினால் சோளச் செய்கைக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அழிவடையும் சோளத்தை கால்நடைகளுக்கு வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


மீளாய்வு செய்யப்பட்ட பேருந்து கட்டணப் பட்டியல் இன்று வெளிவரும்!
பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்!
தொழில்நுட்ப பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!
உடற்கல்வி டிப்ளோமா நியமனத்தை  தரம் 3 க்குள் உள்வாங்கவும்