அளவெட்டியில் மீன் வியாபாரிகள் போராட்டம்!

Thursday, March 21st, 2019

யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய வரி அறவீடுகள் தொடர்பாக சந்தை வளாகத்தில் பிரதேச சபையால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்வயிட்டதன் பின்னர், சந்தைக்கு வெளியே இந்த போராட்டத்தை வியாபாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே”,ஊழல் அரசியல் பெருச்சாளிகளே வரிச் சுமையை மக்கள் மீது திணிக்காதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts:

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்க...
முறிகள் விநியோகத்துடன் நேரடி தொடர்புடைய தரப்பிடமிருந்து நட்டத்தை மீள அறவிட முடியும் - சட்டமா அதிபர் ...
கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுங்க அதிகாரி...