அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ சென்ற பயணிகள் விமானம் கடத்தப்பட்டது!
Tuesday, March 29th, 2016அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ சென்ற பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடத்தப்பட்ட எகிப்துஏர் விமானம் சைப்ரஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கடத்தப்பட்டது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 80 பயணிகளுடன் விமானம் கடத்தப்பட்டு உள்ளது.
விமானத்தை ஒருவர் கடத்தியதாகவும், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
சைப்ரஸுல் தரையிறக்கப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள். 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை ஆயுதம் ஏந்திய ஒருவர் தான் கடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நபர் தனது உடலில் கட்டியுள்ள குண்டுகளை வெடிக்கச் செய்துவிடுவதாகக் கூறி மிரட்டி வருகிறாராம். இந்நிலையில் எகிப்து அதிகாரிகள் தீவிரவாதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|