அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம் – இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்!

Saturday, May 23rd, 2020

அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டின் பிரதான நகரங்களிலிருந்து கொழும்பு வரை அலுவலக போக்குவரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச மற்றும் தனியார் ஊழியர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பதிவு செய்துகொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: