அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் – அரச ஊழியர்களுக்கு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை!
Tuesday, January 3rd, 2023அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் சமூக வலைத்தளங்களில் இருப்பதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்து, அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சத்திரசிகிச்சையின் போது கட்டில் உடைந்து வீழ்ந்ததால் மருத்துவருக்குக் காயம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளைமுதல் முழமையான கற்றல் செயற்பாடகள் ஆரம்பம் - நோய்...
அதிகபட்ச விலைக் காட்சிப்படுத்தவது கட்டாயம் - இல்லையேல் சட்ட நடவடிக்கை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ அ...
|
|