அலுகோசு பதவிக்கு தேர்வானவர்கள் வைத்திய பரிசோதனைக்கு!

Saturday, May 11th, 2019

அலுகோசு பதவிக்காக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் அடுத்த வாரத்திற்குள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இந்த வைத்திய பரிசோதனை இடம்பெற உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

குறித்த பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அண்மையில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு 30 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு விஷேட பயிற்சி வழங்கப்பட்டதன் பின் அந்த சேவையில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

Related posts: