அறுவை சிகிச்சையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வழிகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது!

Thursday, November 3rd, 2016

அறுவை சிகிச்சை செய்யும் போதும் மற்றும் செய்த பின்னும் தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் புதிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் உயிர்களை காப்பது மட்டுமின்றி, ஆன்டிபயாடிக் எதிர்ப்பை பரவ செய்யாமல் தடுக்கும் என்று நம்புகிறார்கள்.இந்த பரிந்துரைகளில், அறுவை சிகிச்சைக்குமுன் நோயாளிகள் குளித்துவிட்டார்களா என்பதை உறுதிபடுத்த வேண்டும் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குமுன் அதனை மேற்கொள்ளும் மருத்துவர்கள் குழு கைகளை கழுவியிருக்க வேண்டும் என்பன அதில் அடக்கம்.

மேலும், தொற்றை தவிர்க்க பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக், அறுவை சிகிச்சை செய்யப்படும் போதும், செய்வதற்குமுன்பும் கண்காணிக்கப்பட வேண்டுமே தவிர செய்து முடித்த பிறகு அல்ல என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளில் சுமார் 11 சதவீதம் பேர் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கும் ஆஃப்ரிக்க பெண்களிடையே இந்த தொற்று சதவீதமானது 20 சதவீதமாக அதிகரித்து காணப்படுகிறது.

08-who34566-600

Related posts: