அறுவடை தொடர்பில் கட்டமைப்பை தயாரிக்குமாறு பணிப்புரை : விவசாய அமைச்சர்!

Thursday, November 22nd, 2018

உடனடியாக அறுவடை எதிர்வுகூறல் கட்டமைப்பை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத்திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழவகைகள், மரக்கறிகள், தானியங்கள் என்பனவற்றின் வருடாந்த அறுவடை பற்றி சரியான தகவல் கட்டமைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அறுவடை, விற்பனை, கொள்வனவு என்பனவற்றின் போது இடைத்தரகர்களின் சுரண்டலும் இடம்பெறுகிறது. விவசாய அமைச்சின் பயிர்கள் தொடர்பான எதிர்கூறல் அறிக்கைகளை தயாரித்திருந்தாலும், அவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

மேலும் விவசாயிகள் பயிரிடும் மரக்கறிவகைகள், பழங்கள், தானிய உற்பத்திகள் என்பனவற்றின் அறுவடைகாலம் என்பனவற்றை அறிந்துகொள்வதன் மூலம்பயிர் இறக்குமதியை தடுக்கமுடியும். இதன்மூலம் உள்நாட்டு விவசாயிகளுக்கு கூடுதலான விலைக்கு அறுவடைகளை விற்பனை செய்யமுடியும் என்று விவசாயத்துறை அமைச்சர்மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: