அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம்!
Sunday, March 7th, 2021பயிர் நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக விவசாய அமைச்சர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம் குறித்த வேலைத்திட்டம் அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை இந்த நிகழ்ச்சித் திட்;டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 2 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை, ஹம்பாந்தோட்ட, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை : இன்று மாலை முடிவுகள் ...
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றென அடையாளம் காணப்படுவோர். எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி – போதனா வைத்...
மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாக...
|
|