அறுவடைகளை 18தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளுங்கள் – வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் கோரிக்கை!

எதிர்வரும் 18.01.2021 தொடக்கம் 24.01.2021 வரையான காலப்பகுதியில் ஏற்படும் மழையற்ற காலத்தில் அறுவடைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
வவுனியா மாவட்ட விவசாயிகளே தற்போது பெய்துவரும் மழையுடனான காலநிலை18.01.2021 தொடக்கம் 24.01.2021 வரையான ஒரு வார காலப்பகுதியில் பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன் பின்னர் 25.01.2021 தொடக்கம் 07.02.2021 வரையான காலப்பகுதியில் மழை மீண்டும் பெய்யும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
எனவே அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை எதிர்வரும் 18 தொடக்கம் 24 வரையிலான காலப்பகுதியில் அறுவடை செய்து இழப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்வதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|