அறிவிப்புக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022

அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நாட்களில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மாத்திரமே மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட நேரத்தை மீறி சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய விதம் தொடர்பான நேர அட்டவணை இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை இலங்கை மின்சார தனியார் சங்கம் எனப்படும் லேகோ நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: