அறிமுகமாகிறது புதிய வகை வாகனம்!

இலங்கையில் பாவனையிலுள்ள முச்சக்கர வண்டிக்கு மாற்றீடாக வேறு வாகனம் ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான புதிய நடைறைமுறையை இலங்கை முன்னெடுத்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய கருத்தினை அடிப்படையாக கொண்டு இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக மாற்று நடவடிக்கையாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள பஜாஜ் Qute என்ற வாகனம் இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த வாகனம் மோட்டர் வாகனமாக காணப்படாதெனவும், முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் என்ஜின் திறன் 216.6 CC ஆக உள்ளதெனவும், Qute வாகனத்தின் நீளம் 2752 மில்லிமீற்றராகவும், அகலம் 1312 மில்லி மீற்றராகவும் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.இதன் உயரம் 1652 மில்லி மீற்றர் எனவும், 4 பேர் வசதியாக பயணிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.
Related posts:
|
|