அறிமுகமாகிறது அதி நவீன ஸ்மார்ட் மின்சார மானி !

Friday, February 21st, 2020

இலங்கையில் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய ஸ்மார்ட் மின்சார மானி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மின்சார முறைக்கேடுகளை தடுக்கும் நோக்கில் இலங்கை அரை அரச நிறுவனத்தினால், இந்த மானி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பயன்படுத்தும் மின்சார மானியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றன. இதனால் மீட்டர் பயன்பாட்டின் போதும் மீட்டர் வாசிப்பின் போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான நெருக்கடிகளை தடுக்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட் மானியை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டுக்காக 64000 புதிய ஸ்மார்ட் மின்சார மானிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் இரண்டாம் கட்டமாக சர்வதேச சந்தைக்கும் இந்த மீட்டர் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வருடத்திற்கும் 4 இலட்சம் ஸ்மார்ட் மின்சார மானிகளை தயாரிப்பதே இலக்காகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: