அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Monday, February 22nd, 2021

ஏ;ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்கான குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கதிர்காமப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அறிக்கையின் பரிந்துரையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது நடைபெற்றுவரும் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் சொத்துக்கள் மக்களின் நலனுக்காகப் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்திச் செய்யப்படும். மாறாக சொத்துக்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: