அறிக்கைகளை சமர்ப்பிக்காத கட்சிகளின் பதிவு இரத்து!

Tuesday, January 7th, 2020

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு ஜனவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

பல கட்சிகள் தம்மை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, 70 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பல அரசியல் கட்சிகள் இதுவரை தங்கள் வரவு, செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை.

எனவே இந்த கட்சிகளின் பதிவினை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்டும் என ஆணையகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts: