அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கொரோனா – சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!

உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாமலும் தாக்கலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தற்போது எச்சரிக்கையொன்றை வெளிழயிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – கடந்த இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளி கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதுடன், இதுவரை 7 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|