அறநெறி பாடசாலைக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

தெல்லிப்பளை தந்தை செல்வாபுரம் கன்னிவளவு பிள்ளையார் அறநெறி பாடசாலைக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் பாடசாலை தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த அறநெறி பாடசாலை நிர்வாகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த தளபாடங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இன்றையதினம்(10) நடைபெற்ற வைபவத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அறநெறி பாடசாலை நிர்வாகத்தினரிடம் குறித்த பொருட்களை வழங்கிவைத்துள்ளார். இந்நிகழ்வில் கட்சியின் வலி தெற்கு நிர்வாக செயலாளர் வலன்ரயன் உடனிருந்தார்.
Related posts:
அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து!
வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப...
சர்வதேச ரீதியில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடுகிறது இலங்கை - பேராசிரி...
|
|