அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம் – அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

அறநெறி கல்வியை கட்டாயப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்துமாறும் அவர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
அந்த மாணவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டங்களுக்கு அமைய, அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காணியற்றோருக்கு காணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் ஒத்திவைப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை - அமைச்சர் டலஸ் அழ...
|
|