அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம்!

Saturday, February 2nd, 2019

பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் பொருளாதார வசதிகளற்ற அறநெறிப்பாடசாலைகளுக்காக ஆயிரத்து 200 சதுர அடி பரப்பில் கட்டடங்கள் மற்றும் சுகாதார வசதிகள்செய்து கொடுக்கப்படும்.

முதல் கட்டமாக 50 முன்பள்ளி பாடசாலைகளுக்கான கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை இடம்பெறவுள்ளது.

இதற்காக 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts: