அறங்கூறுநர்களுக்குப் பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் – இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க கோரிக்கை!

Friday, July 7th, 2023

தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை அறங்கூறுநர்களுக்குப் பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு சிட்னி டவ்னிங் மாவட்ட நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: