அர்ப்பணிப்பான பங்காளராக அமெரிக்கா செயற்படுகிறது!

Wednesday, July 13th, 2016

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்காவும் அர்ப்பணிப்பான பங்காளராக இருந்து செயற்பட்டு வருவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி ராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இலங்கை, நல்லிணக்கத்துக்காக இன்னும் பல பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது

எனினும் சாத்தியமான உண்மையான இலங்கை அடைவதற்கு அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்

இலங்கை மேற்கொள்ளவுள்ள அரசியல் சாசன மீளமைப்பை அடுத்து அமெரிக்கா தமது முதலீடுகளை ஊக்குவிக்க எதிர்ப்பார்க்கிறது என்றும்  இதன்மூலம் எதிர்க்காலத்தில் இரண்டு நாடுகளும் நன்மை பெறமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த உதவி ராஜாங்க செயலர் டொம் மாலிநொவ்ஸ்கி, இலங்கையை பொறுத்தவரையில் நல்லிணக்க விடயங்களில் அது வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு பொருளாதார உதவிகளையும், நல்லிணக்கத்துக்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, சமாதானத்தில் அக்கறை கொண்டு செயற்படுவதால், அமெரிக்கா அந்த இலக்கை அடைய உதவியளிக்கும் என்றும் டொம் மாலிநொவ்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.

Related posts: