அர்த்தம் மாறுப்படும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமானது – சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வின்போது அர்த்தம் மாறுப்படும் வகையில் நாட்டின் தேசீய கீதம் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நான்காவது லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழா நேற்றுமுன்தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில், இடம்பெற்றது.
இதில் தேசிய கீதத்தை இசைப்பதற்கான வாய்ப்பு பாடகி உமார சிங்ஹவங்சவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது, அவர் ஸ்ரீலங்கா மாதா என்பதற்கு பதிலாக பிழையான உச்சரிப்பில் ஸ்ரீலங்கா மஹதா என தேசிய கீதத்தை சிங்கள மொழியில் இசைத்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரைவான விசாரணைகள் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.
ஈதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|